வவுனியா தாண்டிக்குளத்தில் மின்கம்பத்துடன் மோதி டிப்பர் விபத்து : மின்சாரம் தடை!!

1146

வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று (03.04.2018) மாலை 3.30 மணியளவில் டிப்பர் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. எனினும் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா குருமன்காடு – தாண்டிக்குளம் பிரதான வீதியில் காணப்படும் வாகன திருத்தும் இடத்திலிருந்து பின்பக்கமாக வீதிக்கு ஏற முற்பட்ட டிப்பர் வாகனம் வீதியின் அருகே காணப்பட்ட மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் போது மின்கம்பம் துண்டாகவுடைந்து வீழ்ந்தமையினால் அப் பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன் தற்போது மின்சாரத்தினை சீராக்கும் பணியில் மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.