பிரித்தானிய கடவுச்சீட்டு ஒப்பந்தம் : தயாரிப்பாளர்கள் முறையீடு!!

548

பிரெக்சிற்றுக்கு பின்னர் பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கடவுச்சீட்டை தயாரிப்பதற்கு பிரான்ஸ் நிறுவனத்தை பயன்படுத்தும் தீர்மானத்துக்கு எதிராக பிரித்தானிய கடவுச்சீட்டு தயாரிப்பாளர்கள் முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

புதிய கடவுச்சீட்டை தயாரிக்க பிரான்கோ-டச்சு நிறுவனமான ஜெமால்டோவுக்கு 490 மில்லியன் பவுண்ட்ஸூக்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கு எதிராக பிரித்தானிய கடவுச்சீட்டு தயாரிப்பாளரான டி லா ரியூ நிறுவனம் முறையீடு செய்ய தயாராகி உள்ளது.

ஜெமால்டோ தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த சிறந்த வாய்ப்பை கொண்டிருப்பதாக கருதப்படுகின்ற நிலையில் ஜெமால்டோவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது. எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

ஆனாலும் ஒப்பந்தத்தை உத்தியோகபூர்வமாக ஏற்படுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.

பிரித்தானியாவில் 1998ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கடவுச்சீட்டுப் பயன்பாடே இருந்துவரும் நிலையில், பிரெக்சிற்றுக்குப் பின்னர், எதிர்வரும் 2019ஆம் ஆண்டில் புதிய கடவுச்சீட்டுகளை அறிமுகப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடவுச்சீட்டுகள் நீலம் மற்றும் தங்க நிறங்களை உடையதாக வடிவமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.