வவுனியாவில் சேதன மரக்கறிச் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை!!

1355

நஞ்­சற்ற விவ­சா­யச் செய்­கையை ஊக்கப்படுத்துவதற்காக எதிர்­கா­லத்­தில் பல்­வேறு வகையான செயற்­றிட்­டங்­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன என்று வவு­னியா மாவட்­டப் பிரதி மாகாண விவ­சாய பணிப்­பா­ளர் த.யோகேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது..

வவு­னியா மாவட்­டத்­தில் கடந்த ஒரு வரு­ட­மாக நஞ்­சற்ற விவ­சாய நட­வ­டிக்­கை­க­ளில் நாம் ஈடு­பட்டு வருகின்றோம். இன்­றைய காலப்­ப­கு­தி­யில் அதி­க­ள­வான நஞ்­சுள்ள பழ­வ­கை­கள் மரக்­க­றி­கள் நுக­ரப்­ப­டு­வ­தால் மக்­க­ளுக்கு பல்­வேறு வித­மான நோய்­கள் ஏற்படுகின்றன.

எனவே நாம் அதன் முக்­கி­யத்­து ­வத்தை உணர்ந்து நஞ்சற்ற உற்­பத்­தி­களை செய்­வ­தற்­காக நடவடிக்கைகளை மேற்­கொண்டு வரு­கின்­றோம்.

மூன்று வித­மாக நாம் இந்த திட்­டத்தை நடைமுறைப்படுத்தி வரு­கின்­றோம். நஞ்­சற்ற மரக்­கறி உற்­பத்தி செய்­வ­தற்கு தேவை­யான உள்­ளீ­டு­களை உற்பத்தி செய்தல், அவற்றை எவ்வாறு உற்­பத்தி செய்வது என்ற ஆலோ­ச­னை­களை விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கு­தல், அதற்­கான சந்தை வாய்ப்­பு­களை பெற்­றுக் கொடுத்­தல் ஆகிய வழி­க­ளில் மேற்­கொண்டு வருகின்றோம்.

இதன் முதற்­கட்­ட­மாக 150 விவ­சா­யி­களைத் தெரி­வு­செய்து அவர்­க­ளி­டம் இருந்து கிடைக்­கின்ற மரக்­கறி பழவகைகளை விற்­பனை நிலை­யம் ஒன்­றில் வகைப்படுத்தி விற்­ப­னை­செய்து வரு­கின்­றோம்.

எனி­னும் சரி­யான விளைச்­சலை பெறு­வ­தற்­கான தரமான சேத­னப் பச­ளை­கள் மற்­றும் மருந்­து­க­ளைப் பெறு­வ­தில் கடும் சவாலை சந்­திக்­கின்­றோம். எனவே எமது அடுத்த வேலைத்­திட்­ட­மாக அதற்­கான குறித்த உள்­ளீ­டு­களை உற்­பத்­தி­செய்து அதனை விவசாயிகளுக்கு மானிய அடிப்­ப­டை­யில் வழங்குவதற்கான பல வேலைத் திட்­டங் களை மேற்கொள்ளவுள்ளோம்.

மேலும் மாகாண குறித்­தொ­துக்கப்பட்ட நிதி­யி­னூ­டாக சேதன மரக்­க­றிச் செய்­கையை ஊக்­கு­விப்­ப­தற்­காக 25 விவ­சா­யி­க­ ளுக்கு தேவை­யான கட்­ட­மைப்­பு­க­ளை­யும் தொழில்­நுட்ப ஆலோ­ச­னை­க­ளை­யும் நிதியாதாரங்களையும் வழங்கி வரு­கி­றோம்.

தற்­பொ­ழுது ஒரு வரு­ட­மாக இந்தச் செயற்­பாட்டை செய்வதுடன் எமது விற்­பனை நிலை­யத்­தில் உள்ள சேதன மரக்­க­றி­கள் அனைத்­தும் மக்­க­ளி­டம் நல்ல வரவேற்பை பெற்­றுள்­ளன. எதிர்­கா­லத்­தில் அநே­க­மான மக்­கள் பய­ன­டை­யும் படி­யாக இதனை பரந்­த­ள­வில் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைளை மேற்கொள்ளவுள்ளோம் என்று தெரிவித்தார்.