பலாத்காரம் செய்த கும்பலை அடித்து உதைக்க அனுமதி கேட்டு கதறி அழுத பெண்!!

1242

delhiமும்பை சக்தி மில்ஸ் கட்டடத்தில் சில மாதங்களுக்கு முன்பு பெண் புகைப்படக் கலைஞர் தனது நண்பருடன் படம் பிடிக்க சென்றார்.

அப்போது அங்கு இருந்த 5 பேர் கொண்ட கும்பல் நண்பரை கட்டிப் போட்டு பெண் புகைப்படக் கலைஞரை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகள் 5 பேரையும் பொலிசார் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கு மும்பை விரைவு நீதிமன்றில் நடந்து வருகிறது.

நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, திடீரென 18 வயது இளம் பெண் ஒருவர் வந்து நீதிபதியிடம் தானும் இந்த 5 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பரபரப்பு புகார் கூறினார்.

தான் தொலைபேசி இயக்குனராக வேலை பார்ப்பதாகவும், கடந்த ஜூலை 31ம் திகதி சக்தி மில்ஸ் பகுதிக்கு தனது நண்பருடன் சென்ற போது 5 பேர் கும்பல் நண்பரை கட்டிப்போட்டு தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறினார்.

அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அந்தப் பெண் அழுது கொண்டே தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார்.

அப்போது அவர் என்னை பலாத்காரம் செய்த போது நான் அவர்களுடன் போராடினேன். கயவர்கள் என்னை மிருகத்தனமாக தாக்கினார்கள். அவர்களை இப்போது அடித்து உதைக்க அனுமதி தாருங்கள் என்று கூறியவாறு நீதிபதியைப் பார்த்து கதறி அழுதார்.

பின்னர் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியுமா என்று நீதிபதி கேட்டார். அதற்கு அந்த பெண் எனக்கு அவர்கள் அருகில் செல்லவே பயமான இருக்கிறது என்றார்.

உடனே நீதிபதி அந்தப் பெண்ணை குற்றவாளிகளிடம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லுமாறு கூறினார். இதையடுத்து 5 பேரில் 4 பேர்தான் தன்னை பலாத்காரம் செய்ததாக அடையாளம் காட்டினார்.

சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட ஆடைகள் மற்றும் இதர பொருட்களையும் அந்தப் பெண் அடையாளம் காட்டினார்.

இது பற்றி வக்கீல் உஜ்வல் நிகாம் கூறுகையில் 18 வயது பெண் திடீர் என்று நீதிமன்றத்தில் வந்து நீதிபதியிடம் கதறி தனக்கு நேர்ந்த கொடுமையை சொன்னார். அவரது வாக்குமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குற்றவாளியை அடிக்க அனுமதி கேட்டார். அதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வில்லை என்றார்.