மடோனாவின் இளமைக்கால நிர்வாண படங்கள் ஏலத்தில்!!

583

madonaபொப் இசையின் ராணி என்று அழைக்கப்படும் மடோனாவின் இளமைக்கால நிர்வாணப் படங்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.

தனது கவர்ச்சியாலும், இனிய குரலாலும் அமெரிக்க இரசிகர்களை கட்டிப்போட்ட மனோடனாவுக்கு 55 வயது ஆகிறது. இப்போதும் அவர் மவுசு குறையாமல் இருக்கிறார்.

நியூயோர்க் நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜெரேமிபிராம்மெர் தனது அருங்காட்சியகத்தில் மடோனாவின் இளமை கால நிர்வாணப்படங்கள் வைத்துள்ளார். அவற்றை அவர் ஏலம் விடப் போவதாக அறிவத்துள்ளார். எதிர்வரும் 9ம் திகதி இணையத்தின் மூலம் ஏலம் விட தீர்மானித்துள்ளார்.

18 வயதில் மடோனா மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடனம் பயின்றார். அப்போது அவர் 10 அமெரிக்க டொலருக்காக, ஹெர்மன் குல்கென்ஸ் என்பவருக்கு நிர்வாண போஸ் கொடுத்தார்.

இதில் மேலாடை இன்றியும், பலவித கோணங்களிலும் எடுக்கப்பட்டது. இது அவர் பிரபலமாவதற்கு முன் எடுக்கப்பட்டது. தற்போது அதற்கு மவுசு ஏற்பட்டுள்ளதால் ஏலத்துக்கு வந்துள்ளது.

இளமை காலத்தில் தான் நிர்வாண போஸ் கொடுத்ததை மடோனாவும் ஒப்புக்கொண்டார். இதற்கு முன் 1983ல் மடோனா புகைப்படங்களை பிளேபோய் பத்திரிகையில் பிரசுரிப்பது தொடர்பாக சட்ட சிக்கல் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு 1985ல் படங்கள் பிரசுரமானது.