வவுனியாவில் மாவீரன் பண்டார வன்னியன் நினைவு நேற்று (31.10) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பண்டார வன்னியனின் சிலைக்கு மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, ஜனாதிபதி சட்டத்தரணி சிற்றம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண அமைச்சர் சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான லிங்கநாதன், தியாகராசா, இந்திரராஜா, மற்றும் பிரதேச செயலாளர், நகர சபை செயலாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர்,வடமாகாண அமைச்சின் இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன், வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார், தமிழ்மணி அகளங்கன், சேனாதிராசா, ஆகியோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.








