17வயது காதலியை கத்தியால் குத்திவிட்டு 18 வயது காதலன் தற்கொலை!!

560

knifஇரத்தினபுரி, இரக்குவானை பிரதேசத்தில் காதலன் தனது காதலியை கத்தியால் குத்தி படுகாயப்படுத்திவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இரக்குவானை – தெனியாய வீதியில் உள்ள காதலியின் வீட்டில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காதலி வீட்டுக்கு காதலன் சென்றுள்ள நிலையில் அங்கு இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்போது காதலன் காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். பின் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

படுகாயங்களுக்கு உள்ளான தெனியாய பகுதியைச் சேர்ந்த 17 வயது காதலி காவத்தை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தெரணியகல, மீயனவிட்ட பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய காதலனே உயிரிழந்துள்ளார். இரக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.