யாஹு, கூகுள் தரவு மையங்கள் மீது கைவரிசையை காட்டிய அமெரிக்கா!!

330

yahooயாஹு மற்றும் கூகுள் தரவு மையங்கள் மீது அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் ஊடுருவல்களை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முன்னாள் புலனாய்வு அதிகாரி எட்வேட் ஸ்னோவ்டன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இவரின் கூற்றுப்படி பல மில்லியன் கணக்கான தரவுகள் நாள்தோறும் ஊடுருவல்கள் மூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அமெரிக்க புலனாய்வு நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஏற்கனவே ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் தொலைபேசி உரையாடல் ஒட்டுகேட்கப்பட்ட விடயம் ராஜதந்திர சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையிலேயே அமெரிக்காவின் யாஹு மற்றும் கூகுள் ஊடுருவல்கள் குறித்த தகவல்களை எட்வேட் ஸ்னோவ்டன் வெளியிட்டுள்ளார்.