நடிகை சரிதாவை விவாகரத்து செய்து விட்டேன் : எனது 2ம் திருமணம் சட்டப்படி செல்லும் : நடிகர் முகேஷ்!!

506

sarikaநடிகை சரிதாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த மலையாள நடிகர் முகேஷ் திடீரென அவரை விட்டு பிரிந்தார். கேரளாவை சேர்ந்த நடனக் கலைஞர் தேவிகாவை சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

கொச்சியில் உள்ள ரிஜிஸ்தர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்கு முகேசின் முதல் மனைவி சரிதா எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறும்போது..

முகேஷ் சட்டவிரோதமாக தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு உள்ளார். எனக்கும் அவருக்கும் இதுவரை விவாகரத்து நடக்கவில்லை. விவாகரத்து பெறாமல் இரண்டாம் திருமணம் செய்தது கிரிமினல் குற்றம். எனவே அவருக்கு எதிராக வழக்கு தொடரப்போகிறேன் என்றார்.

சரிதா குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து முகேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது..

எனது முன்னாள் மனைவி சரிதாவும் நானும் 1996ல் பிரிந்து விட்டோம். அதன் பிறகு சரிதாவிடம் விவாகரத்து கேட்டு எர்ணாகுளம குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

2012ல் எங்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. தேவிகாவை 2ம் திருமணம் செய்தபோது விவாகரத்து பெற்ற ஆவணங்கள் ரிஜிஸ்தர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டன. எனவே எனது 2ம் திருமணம் சட்டப்படி செல்லத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.