சந்தோஷத்தின் உச்சத்தில் ஸ்ரீதிவ்யா!!!

812

sri divyaவருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹிட்டடித்ததால் ஊதா கலர் ரிப்பன் புகழ் ஸ்ரீதிவ்யாவுக்கு வாய்ப்புகள் குவிகின்றன. பென்சில் படத்தில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் ஜோடியாக ஶ்ரீதிவ்யா நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் வருகிற நவம்பர் 20ம் திகதி முதல் கலந்துகொள்ள இருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் அடுத்து இயக்க இருக்கும் வீர தீர சூரன் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஶ்ரீதிவ்யா நடிக்கிறார்.

இந்தப் படங்கள் தவிர இன்னும் இரண்டு படங்களில் கமிட் ஆக உள்ளார் ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்குப் பிறகு நிறைய படங்களில் நடிக்க அழைப்பு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆனால் எனது சொந்த ஊரான ஹைதராபாத்தில் படித்து வருவதால் நடிப்புடன் படிப்பையும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.

இதனால் நிறைய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. நல்ல கதை, நல்ல இயக்குனர் மற்றும் பெரிய ஹீரோ என்றால் என் கால்ஷீட் நிச்சயம் உண்டு என்கிறார் ஶ்ரீதிவ்யா.