வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

1322

வவுனியா நூலக வீதியில் இன்று (10.04.2018) காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற வான் – மோட்டார் சைக்கில் விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மின்சாரசபை வீதியிலிருந்து வைரவப்புளியங்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் பூங்கா வீதியின் மறுபக்க (வைரவப்புளியங்குளம் வீதி) வீதிக்கு திரும்ப முற்பட்ட சமயத்தில் எதிர் திசையிலிருந்து மன்னார் வீதி நோக்கி பயணித்த வான் மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும்.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.