மனைவியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை பொலிசார் கைது செய்த நிலையில், இறந்த பெண்ணின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
சென்னை வடபழனியை சேர்ந்தவர் பிரபு என்கிற பாலகணேஷ். இவர் மனைவி ஞானப்பிரியா.
கடந்த 5-ஆம் திகதி தனது வீட்டில் ஞானப்பிரியா ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்த நிலையில் பாலகணேஷ் கை,கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.
முதலில் இது கொள்ளையர்களின் செயல் என கூறப்பட்ட நிலையில் பாலகணேஷ் தனது மனைவியை கொன்று நாடகமாடியது தெரியவந்தது.
இதற்கு அவரின் நண்பர் மனோஜும் உதவியுள்ளார். கடந்த சில மாதங்களாக, ஞானப்பிரியாவின் நடவடிக்கைகள், அவமானப்படுத்தும் பேச்சு ஆகியவற்றால் பாலகணேஷ் விரக்தியடைந்த நிலையிலேயே அவரை கொலை செய்துள்ளார்.
இதையடுத்து பாலகணேஷ் மற்றும் மனோஜை பொலிசார் கைது செய்து வடபழனி காவல் நிலையத்தில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், ஞானப்பிரியைவை பாலகணேஷ் கொலை செய்த தகவல் கிடைத்ததும், அவரது சகோதரர்கள். உறவினர்கள் காவல் நிலையத்துக்கு வந்தனர். ஆத்திரத்தில் அவர்கள், ‘உன்னை நம்பித் தான் கட்டிக்கொடுத்தேன். இப்படிச் செய்துவிட்டாயே பாவி என்று கதறினார்கள்.
தொடர்ந்து, உறவினர்களில் சிலர் அவரை அடிக்கவும் பாய்ந்ததாகவும், பொலிசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள் என்றும் கூறப்படுகிறது.






