பிரித்தானிய அரச மாளிகைக்குள் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்!!

866

பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமணத்தை ஒளிபரப்பும் வாய்ப்பை கனேடிய தொலைக்காட்சி செய்தி சேவையின் ஊடகவியலாளர் பெற்றுள்ளார்.

இலங்கையை பூர்வீமாக கொண்ட ஆன் மேரி அபேசிங்க மெடிவக்கே (Anne- Marie Mediwake) என்பவரே இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். இவர் 1975ஆம் ஆண்டு கண்டியில் பிறந்த ஒருவராகும்.

அவர் மெர்வின் மெடிவகேவின் மகளாகும். அவர் தனது குடும்பத்துடன் கனடாவுக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்றார். அவர் கனேடிய தொலைகாட்சி ஒளிபரப்பாளருக்கு கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த விருதுகளை வென்றுள்ளார்.

கனேடிய ஒளிபரப்பு தொலைக்காட்சி மற்றும் தொலைக்காட்சி வலையமைப்பின் முதன்மையான தொலைக்காட்சி செய்திகளை ஒளிபரப்பியுள்ளார்.

ஆன் மேரி தனது தொலைக்காட்சி வாழ்க்கையை 1993 ஆம் ஆண்டில் Lethbridgeஇல் இளவயதினராக தொடங்கியுள்ளார். அங்கு Alberta பகுதியில் உள்ள உள்ளூர் தொலைக்காட்சிக்காக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளை எழுதவும் தயாரிக்கவும் ஆரம்பித்தார்.

1990 ஆண்டுகளில் ஆன் மேரி தனது வீட்டு மாகாணமான Albertaவில் உள்ள பல்வேறு நிலையங்களில் பணி புரிந்துள்ளார். அங்கே அவர் தொலைக்காட்சி தொடர்பான எல்லாவற்றையும் முயற்சி செய்ய ஆர்வமாக இருந்தார்.

Albertaவில் 6 ஆண்டுகள் செலவழித்த பிறகு, அவர் CTV க்கு நிருபராக பணியாற்றிய டொரொண்டோவிற்கு சென்றார். 2011 ஆம் ஆண்டில், அவர் ஆண்டின் டொரண்டோ பெண் என்ற சிறப்பு பெயரை பெற்றுள்ளார்.

2007ஆம் ஆண்டு அவர் திருமணம் செய்து குழந்தை ஒன்று தாயானார். இந்நிலையில் அவர் லண்டன் ரோயல் திருமணத்தை ஒளிபரப்பும் சந்தர்ப்பத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய ராணி எலிசபெத்தின் பேரனும் இளவரசர் வில்லியமின் தம்பியுமான இளவரசர் ஹரிக்கும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லிக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி திருமணம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது திருமண நிகழ்வின் சில முக்கிய விடயங்களை கென்சிங்டன் அரண்மனை (Kensington Palace) தனது அதிகாரபூர்வ கீச்சகத்தில் வெளியிட்டுள்ளது.