கொடிய பாம்பிடமிருந்து தாயின் உயிரைக் காப்பாற்றிய அதிசய சிசு!!

540

snakகொடிய விசமுடைய பாம்பு ஒன்றிடமிருந்து தாயின் உயிரைக் காத்த அதிசய சிசு ஒன்று தொடர்பிலான தகவல் குருணாகல் வெல்லாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

தாயைக் கடிப்பதற்காக தயாரான பாம்பை ஏழு மாத சிசுவொன்று கையால் பிடித்து தாயைக் காப்பற்றியுள்ளது. வெல்லாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சிசுவை சுமந்து வேலி ஓரத்திற்கு சென்ற தாயை வேலியில் இருந்து பாம்பு கடிக்க முற்சித்த போது சிசு அதன் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு சத்தமாக அழுதுள்ளது.

இதனால் பாம்பினால் தாயைக் கொத்த முடியவில்லை. பாம்பு சிசுவின் கையை இறுக்கமாக சுற்றிக் கொண்டுள்ளது.

சிசுவின் கையிலிருக்கும் பாம்பை பிரித்தெடுக்க அயலவர்கள் முயற்சித்துள்ளனர். எனினும், பாம்பின் ஒரு பகுதியை மக்கள் இழுத்து எடுத்த போதிலும், ஒரு பகுதி சிசுவின் கையைப் பற்றி சுற்றிய நிலையில் காணப்பட்டது.

இதனால் பதற்றமடைந்த கிராம மக்கள் சிசுவை வைத்தியசாலைக்கு எடுத்தச் சென்றுள்ளனர். விசம் குழந்தைக்கு ஏறாமல் இருக்கும் வகையில் கருவிகளைக் கொண்டு பாம்பை கையிலிருந்து அகற்றி, சிசுவை குருணாகல் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதன்போது குறித்த சிசுவிற்கு ஆபத்து இல்லை எனவும், கொடிய விசமுடைய பாம்பு ஒன்றின் தலையை சிசு இறுக்கமாக பற்றிப் பிடித்துள்ளது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.