காவிரி மேலாண்மை அமைக்க போராட்டம் நடத்தும் அனைத்து கட்சிகளும், அரசியல் மட்டும்தான் செய்கிறார்கள், எனவே போராட்டம் நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என நடிகர் சிம்பு பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி, நாம் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் அந்த பேட்டியின் போது ஏப்ரல் 11ம் திகதி அன்று கர்நாடகாவில் இருக்கும் மக்கள் அங்கிருக்கும் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால் அவர்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைத்ததாக எடுத்துக் கொள்வோம் என்று கூறினார்.
அதன்படி, #Unitedforhumanity எனும் ஹேஷ்டேக்கில், கர்நாடகத்தினர் தங்கள் மாநித்தில் வசிக்கும் தமிழ் நண்பர்களுக்கு தண்ணீர் கொடுக்கின்றனர். அந்த புகைப்படம் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.






