நடுவானிலிருந்து விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம் : 257 பேர் பரிதாபமாக பலி!!

1001

 

அல்ஜீரியாவில் இராணுவ வீரர்கள் சென்ற இராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் 257 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அல்ஜீரியாவின் தலைநகர் Algiers-லிருந்து 200-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள், போலிசாரியோ முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20-க்கும் மேற்பட்டோர், விமானப் பணியாளர்கள் 10 பேர் என 250-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.

விமானம் போபரிக் விமானத் தளத்தில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் 30 கி.மீற்றர் தொலைவில் திறந்த வெளிப்பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 257 பேர் இறந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களை மீட்பு பணியினர் மீட்டு வருவதாகவும், காயமடைந்திருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

விமானத்தில் மொத்தம் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது குறித்து உறுதியான தகவல்கள் தெரிவிக்காத காரணத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் விமான விபத்தில் பொலிசாரியோ அமைப்பைச் சேர்ந்த 26 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மொராக்கோவுக்கு அருகே இருக்கும் மேற்கு சஹாரா பகுதியில் சுதந்திரம் வேண்டிய போராடும் குழுவைச் சேர்ந்தவர்கள் என அங்கிருக்கும் ஊள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.