ரஜினி ஒரு நாகம் : பாரதிராஜா ஆவேசம்!!

1009

ரஜினிகாந்தை இதுவரை பெட்டிக்குள் பூ என்று தான் நினைத்தோம், ஆனால் இன்று தான் தெரிகிறது பூவுக்குள் பூநாகம் இருப்பது என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, போராட்டக்காரர் ஒருவர் பொலிசாரை தாக்கும் வீடியோவை வெளியிட்ட ரஜினிகாந்த், வன்முறை அதிகரித்துவிட்டது, இதனை அடக்க வேண்டும், இல்லையென்றால் நாட்டுக்கே பேராபத்து ஏற்படும் என பதிவிட்டிருந்தார்.

இதனைப்பார்த்த பலரும் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் பொலிசாருக்கு ஆதரவாக பேசுகிறார் என விமர்சனம் செய்தனர்.

இதுகுறித்து பாரதிராஜா பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியதாவது, இதுவரை பெட்டிக்குள் பூ தான் இருந்தது என்று நினைத்தோம், இப்பத்தான் தெரிகிறது பூவுக்குள் பூநாகம் இருப்பது தெரிகிறது.

ஐபிஎல் மைதானத்திற்குள் கொடியுடன் போராடினார்களே அதை பாராட்டி இருக்க வேண்டாமா? ரஜினி வாய் திறக்கும் போது லிப் மூமெண்ட் மட்டும் தான் உன்னுது, டப்பிங் யாரோ பேசிக்கிட்டு இருக்கிறார்கள் என விமர்சனம் செய்தார்.

மேலும், நீங்கள் இன்னும் முழு அரசியல்வாதியாக காட்டிக்கொள்ளவில்லை. தன்னை அரை அரசியல்வாதியாகத்தான் அவர் சொல்லிக்கொள்கிறார். அவர் முதலில் அரசியலில் இறங்கி நடக்கட்டும். அப்புறம் அவர் ஒழுங்கா நடக்கிறாரா? இல்லையா என்று நாங்கள் சொல்கிறோம் என கூறியுள்ளார்