சச்சின் டெண்டுல்கரின் சாதனை விராத் கோலி முறியடிப்பார் என முன்னாள் வீரர் சுனிஸ் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் விராத் கோலி சமீபகாலமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 52 மற்றும் 61 பந்துகளில் சதம் அடித்து மிரட்டியுள்ளார்.
இதுவரையில் 112 இன்னிங்சில் 17 சதங்கள் விளாசியுள்ளார், அதிலும் சேசிங்கில் இவரது துணிச்சலான துடுப்பாட்டம் அனைவராலும் பாராட்டும் விதமாக உள்ளது.
இந்நிலையில் சச்சின் அடித்த 49 சதங்கள்(ஒருநாள் போட்டி) சாதனையை கோலி முறியடிப்பார் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் கோலி ஆடும் விதத்தை பார்த்தால் ஒருநாள் போட்டியில் சச்சினின் 49 சதங்கள் சாதனையை முறியடிக்கக்கூடும். சச்சின் சாதனைகளில் முறியடிக்க முடியாதது பல உள்ளன. எனினும் கோலியின் ஆட்டம் சச்சினின் 49 சதங்கள் சாதனையை முறியடிக்கும்.
அவருக்கு இன்னும் 32 சதங்கள் தான் தேவைப்படுகிறது. இந்த சீசனுக்குள் கோலி எப்படியும் 20 முதல் 22 சதங்கள் கடந்து விடுவார் என்று தெரிவித்துள்ளார்.





