நடிகை சார்மி கவர்ச்சிக்கு மாறி உள்ளார். தமிழில் காதல் அழிவதில்லை படத்தில் சார்மி அறிமுகமானார். ஆகா எத்தனை அழகு, காதல் கிசு கிசு, லாடம் படங்களில் நடித்தார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். தற்போது சர்மிக்கு படங்கள் குறைந்து விட்டன. தெலுங்கில் ஒரு படம் மட்டுமே கைவசம் இருக்கிறது. இதனால் கவர்ச்சி போஸ் படங்களை இணையத்தில் பரவ விட்டுள்ளார்.
சினிமா விழாக்களுக்கும் அரைகுறை உடையில் வருகிறார். ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக குத்தாட்டமும் ஆடுகிறார். இதன் மூலம் மீண்டும் பட வாய்ப்புகளை பிடிக்க முடியும் என்று நம்புகிறார்.





