பிரதிநிதிகள் செல்லலாம், பிரதமர் மன்மோகன் சிங் செல்லக்கூடாது : அமைச்சர் சிதம்பரம்!!

890

sithambaramகொழும்பின் பொதுநலவாய மாநாட்டுக்கு பிரதிநிதிகளை அனுப்பலாம். எனினும் பிரதமர் மன்மோகன் சிங் செல்லக்கூடாது என்று மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்கு நெருங்கிய தரப்புக்களை கோடிட்டு இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் மன்மோகன் சிங் இலங்கை சென்றால் அதற்கான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று காங்கிரஸின் தோழமை கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டுமானால், மன்மோகன்சிங் இலங்கை மாநாட்டுக்கு செல்லவேண்டும் என்று பிரதமருக்கு நெருங்கிய தரப்புக்கள் கருத்துக் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.