புலிகளின் தலைவர் பிரபாகரனது இல்லத்தில் தென்னிந்திய பிரபல நடிகர்!!

571

 

தென்னிந்திய திரைப்பட நடிகர் சதீஸ் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது வீட்டைச் சென்று பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான பதிவொன்றையும் தனது டுவிட்டர் தளத்தில் நடிகர் சதீஸ் பதிவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு பயணம் சென்றுள்ள அவர் யாழ். வல்வெட்டித்துறையிலுள்ள பிரபாகரனது வீட்டிற்கு சென்று பார்வையிட்டதுடன், அங்கு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டுள்ளார்.

மேலும் இது தொடர்பான பதிவொன்றையும் தனது டுவிட்டர் தளத்தில் நடிகர் சதீஸ் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பதுடன் சிவகார்திகேயனினுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களிலில் நடித்துள்ளார்.