வவுனியா நகரசபையை இழந்த கூட்டமைப்பு : சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு!!

660

வவுனியா நகரசபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இ.கௌதமன் தலைவராக தெரிவு செய்யப்பட்டமைக்கு புதிய கலப்பு தேர்தல் முறையே காரணம் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சுமந்திரன்,

“கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் ஏனைய கட்சிகள் திட்டமிட்டு ஒன்று சேர்ந்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட வட்டாரங்களிலே தோல்வியைத் தழுவிய தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள், விகிதாசார முறைமையினால் ஆசனங்களைப் பெற்று நகரசபைக்கு தெரிவாகி உள்ளனர்.

ஏனைய கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா நகரசபைக்கான தலைவர் தெரிவில், கூட்டமைப்புக்கு ஆதரவாக 9 பேரும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைக்கப்பெற்றிருந்தன.

இதனடிப்படையில், தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமன் வவுனியா நகரசபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-