இந்திய அரசுக்கு எதிராக வாக்கு அம்பை எய்ய மக்கள் தயார்!!

700

jeyalalithaஇந்திய மத்திய அரசுக்கு எதிராக வாக்கு அம்பை எய்த மக்கள் தயாராகிவிட்டனர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை.. விலைவாசியை கட்டுப்படுத்துவதில் மாநில அரசின் பங்கு மிக மிக குறைவு. கடைசியாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டபோது 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 43 ரூபாய் 95 காசு என்று இருந்த டீசல் விலை, தற்போது 56 ரூபாய் 61 காசாக உயர்ந்துள்ளது.

அதாவது, 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 29 சதவீத அளவுக்கு டீசல் விலை உயர்ந்துள்ளது. பிற மாநில அரசு போக்குவரத்து கழகங்கள் எல்லாம் அவ்வப்போது ஏற்படும் டீசல் விலை உயர்விற்கு ஏற்ப, பஸ் கட்டணங்களை உயர்த்திக் கொண்டேயிருக்கின்றன.

தமிழகத்தில் மட்டும் தான் இந்த சுமை மக்கள் மீது திணிக்கப்பட வில்லை. விலைவாசி உயர்விற்கு வழிவகுக்கும் தற்போதைய டீசல் விலை உயர்வை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்றும், டீசல் விலையை மாதா மாதம் உயர்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை அன்றாடம் ஆராய்ந்து அவற்றிக்கேற்ப நடவடிக்கை எடுக்காமல் நாட்டை சீரழிக்கும் அரசுக்கு எதிராக வாக்கு எனும் அம்பை எய்த மக்கள் தயாராகிவிட்டார்கள். இதன்மூலம், ஆட்சி மாறும், மக்களின் நிலையும் உயரும். இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.