பச்சை குத்தியதை அழிக்க சிகிச்சை மேற்கொண்டவர் மரணம்!!

603

tatoosபச்சை குத்தியதை அழிக்க சிகிச்சை மேற்கொண்டவர், மலேசியாவில் உயிரிழந்தார்.

மலேசியாவின் சுங்கை பெதானி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் நாயர்(25). இவர் மலேசிய பொலிஸ் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். தன் உடம்பில் குத்தப்பட்டிருந்த பச்சையால், நேர் முகத்தேர்வில் பாதிப்பு ஏற்படுமோ என்று பயந்த தினேஷ், தனியார் மருத்துவமனையை அணுகி, பச்சை குத்தப்பட்டதை அழிக்க சிகிச்சை மேற்கொண்டார்.

மலேசியாவில்கேதா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில், கடந்த செப்டம்பர் 12ம் திகதி சிகிச்சை மேற்கொண்ட தினேஷ், கோமா நிலைக்கு தள்ளப்பட்டார்.

நேற்று முன்தினம் அவர், நினைவு திரும்பாமலேயே இறந்தார். இது குறித்து, தினேஷின் பெற்றோர் அந்த மருத்துவமனையின் மீது புகார் கொடுத்துள்ளனர். எந்த வகையான சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து தற்போது விசாரணை நடக்கிறது.