துறவறம் செல்லும் வைர வியாபாரியின் 12 வயது மகன் : ஆச்சரிய காரணம்!!

1042

இந்தியாவில் வைர வியாபாரியின் 12 வயது மகன் ஜெயின் துறவறம் மேற்கொள்ளவுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் திபேஷ் ஷா. வைர வியாபாரியான இவரின் மகன் பவ்யா ஷா (12). பிறந்ததிலிருந்தே சொகுசாக வளர்ந்துள்ளார். பவ்யா தனது பெற்றோர் சம்மதத்துடன் இன்று ஜெயின் துறவியாக தீக்‌ஷை எடுக்கவுள்ளார்.

இது குறித்து பவ்யா கூறுகையில், கடவுள் காட்டிய சத்திய பாதையை நோக்கி செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் பெற்றோர் இதை எனக்கு சொல்லி கொடுத்ததால் அவர்கள் சம்மதத்துடனே அவர்களை பிரிகிறேன், வருங்காலத்தில் என் பெற்றோரும் துறவறம் மேற்கொள்வார்கள் என கூறியுள்ளார்.

பவ்யாவின் தந்தை திபேஷ் கூறுகையில், எங்கள் மகன் தீக்‌ஷை எடுப்பது எங்கள் குடும்பத்துக்கு மகிழ்ச்சியாகும். அவனை பிரிவதால் எங்களுக்கு வருத்தமில்லை, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதே 12 வயதில் என் மகளும் ஜெயின் துறவியாக சென்றுவிட்டார் என கூறியுள்ளார்