இலங்கையில் தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரிப்பு : மக்கள் அதிர்ச்சி!!

449

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு தீர்வை வரி அறவிடப்படும் நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று அக்ஷய திருதியை கொண்டாடப்பட்டது. அதையடுத்து இன்று தங்கத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

24 கரட் தங்கத்தின் வலை 7,000 ரூபாவாலும், 22 கரட் தங்கத்தின் விலை 6,000 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. செட்டியார் தெருவில் இன்றைய தினம், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 62,000 ரூபாய். நேற்றைய தினம் 55,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 7,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இன்று 62,000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 57,000 ரூபாய். நேற்றைய தினம் 51,000 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 6,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இன்று 57,000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கம் மீது 15% தீர்வை வரி அறவிடப்படும் என நிதியமைச்சு நேற்று அறிவித்திருந்தது. இதன் காரணமாகவே இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.