பற்களில் மஞ்சள் கறையா : வெண்மையாக பளிச்சென்று இருக்க இதை செய்யுங்கள்!!

1422

பற்களை வெள்ளையாக்க எத்தனையோ வழிகளை முயற்சி செய்திருப்போம், இதற்கு டூத்பேஸ்ட் மட்டுமே தீர்வாகாது.நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறைப்படி, ஆயுர்வேத மற்றும் இயற்கையான பொருட்களை கொண்டு பற்களை வெண்மை நிறத்துக்கு மாற்றலாம்.

ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரியை நன்றாக மசித்து பேஸ்ட் போல செய்து, அதை பயன்படுத்தி வாரத்திற்கு 2 முறைகள் பற்களை தேய்த்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும் அல்லது ஸ்டராபெர்ரியை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிடலாம்.

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை: சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நுரை வரும் வரை கலந்து அதை வாயில் உள்ள உமிழ் நீரை துப்பி விட்டு, ஒரு பஞ்சை அதில் நனைத்து பற்களில் தேய்த்து, பின் 1 நிமிடம் கழித்து டூத் பிரஷ் கொண்டு மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.

ஆனால் இம்முறையை அடிக்கடி பயன்படுத்தவோ, 1 நிமிடத்திற்கு மேல் இந்த கலவையை வாயில் வைத்திருக்வோ கூடாது. ஏனெனில் இது பற்களின் எனாமல் பாதிக்கும். எனவே வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.

காய்கறிகள் மற்றும் பழங்கள் : அப்பிள், கரட், கொத்துமல்லி ஆகியவற்றை வாயில் போட்டு மென்று வந்தாலே போதும். அதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, பற்களின் மீது உள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.

ஆயில் புல்லிங் : 1 ஸ்பூன் சுத்தமான ஆர்கானிக் எண்ணெய்யை எடுத்து வாயில் ஊற்றி வாய் முழுதும் எண்ணெய்யை சுழற்றி, உறிஞ்சி பற்களில் படும்படி நன்றாக 15-20 நிமிடங்கள் தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும்.அதன் பின் நீரால் வாயை கழுவி, 2-3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஸ்ட்ரா : காபி, டீ, சோடா, ஒயின் போன்றவை பருகுவதால், பற்களை சேதமடையும். அதனால் அவற்றை பருகும் போது பற்களில் படாதவாறு ஸ்ட்ரா பயன்படுத்தலாம் அல்லது அவற்றை பருகிய பின் வாயை சுத்தமான நீரில் நன்கு கழுவலாம் அல்லது ப்ரஷ் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

ஒலிவ் ஆயில் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து, அதனைக் கொண்டு தினமும் காலையில் பற்களை துலக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 5 நாட்கள் செய்து வந்தால், பற்கள் வெள்ளையாக ஜொலிப்பதை உணர்வீர்கள்.வேப்பிலையை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை பேஸ்ட் உடன் சேர்த்துப் பயன்படுத்தி பற்களை துலக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கி, பற்களும் வெள்ளையாகும்.

பால் மற்றும் தயிரை ஒன்றாக கலந்து, அதனைப் பயன்படுத்தி பற்களை துலக்கி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்து வந்தாலும் நல்ல பலனைப் பெறலாம்.

பிரியாணி இலையை பொடி செய்து, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனைக் பொண்டு பற்களை தேய்த்து 10 நிமிடம் கழித்து வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், பற்களை வெண்மையாகும்.

மஞ்சளை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு பற்களை தேய்த்து, 3 நிமிடம் கழித்து கழுவ வேண்டும், இப்படி செய்தாலும் பற்கள் வெள்ளையாகும்.