நடுவரின் முடிவை கேலி செய்த கிளார்க்குக்கு கண்டனம்!!

293

clerkநடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக மைக்கல் கிளார்க்குக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா டெஸ்ட் அணியின் அணித்தலைவர் மைக்கல் கிளார்க். இவர் தற்போது நியூசவுத் வேல்ஸ் அணிக்கு அணித்தலைவராக விளையாடி வருகிறார்.

சிட்னியில் நியூசவுத் வேல்ஸ் அணிக்கும், டஸ்மேனியா அணிக்கும் இடையேயான கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்றது.
ஆட்டத்தின் போது டஸ்மேனியா வீரருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்டமிழப்பு வழங்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறையை சைகையில் காண்பித்தார் கிளார்க். இப்போட்டியில் டிவி ரீப்ளே வசதி இல்லாததால் மறுபரீசிலனை முறையைப் பயன்படுத்த முடியவில்லை.

எனினும் மறுபரிசீலனை செய்யும்போது உரிய வகையில் முறையிட வேண்டும். அந்த வகையில் கிளார்க் காண்பித்த சைகையானது விதிமுறையை மீறுவதாகும்.

இதைத் தொடர்ந்து கிளார்க்குக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கிளார்க்கும் தனது தவறை ஒப்புக் கொண்டார்.