சூதாட்ட விவகாரம் : பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மீது எப்ஐஆர் பதிவு!!

288

N.Srinivasanநடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்பட மூன்று வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

வீரர்கள் மட்டுமல்லாமல் ஐபிஎல் அணியின் நிர்வாகத்தில் உள்ளவர்கள் மீதும் புகார் கூறப்பட்டது. சென்னையில் அணியின் உரிமையாளர் சீனிவாசன் மருமகன் மீதும் புகார் கூறப்பட்டது.
இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டார்.

சீனிவாசனும், பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கியிருந்து தற்போது நீதிமன்றத்தின் உத்தரவுபடி தலைவராகி உள்ளார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 12ம் திகதி ஜெய்ப்பூர் சாவை மன்சிங் மைதானத்தில் ராஜஸ்தான்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மற்றும் அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெய்ப்பூரில் உள்ள ஜோதிநகர் பொலிஸ் நிலையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து இருவர் மீதும் ஜோதிநகர் காவல் நிலையம் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.