நியூசிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது வங்கதேசம்!!

284

bangaladeshநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் கைப்பற்றியது.

நியூசிலாந்து- வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மிர்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

முதலில் விளையாடிய வங்கதேச அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ஓட்டங்கள் எடுத்தது.

தொடக்க வீரர் தமிம் இக்பால் 58 ஓட்டங்கள் எடுத்தார். நியூசிலாந்தின் நீஷம், அண்டர்சன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 46.4 ஓவர்களில் 207 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், வங்கதேச அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசத்தின் தரப்பில் மோர்டசா, ஷோஹக் கஸி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.