நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு : பரபரப்பான புகார்!!

500

swetha menonஅரசு விழாவின் போது தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக அரசியல் பிரமுகர் மீது நடிகை ஸ்வேதா மேனன் புகார் கொடுத்துள்ளார்.

1991ம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ஸ்வேதா மேனன். மலையாளம் தவிர இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் என சுமார் 80 படங்களில் நடித்துள்ளார்.

களிமண்ணு என்ற மலையாள படத்தில் இவரது பிரசவ காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி நேற்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகை ஸ்வேதா மேனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழா மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில் நடந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது. என்னிடம் குறும்பு செய்த நபர் யார் என்பதை மாவட்ட கலெக்டரிடம் புகாராக தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.
ஆனால் அதுபோன்ற புகார் எதுவும் தனக்கு வரவில்லை என்று கலெக்டர் மோகனன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கேரள அரசியலில் செல்வாக்கு படைத்த ஒரு ஆளுங்கட்சி பிரமுகரின் பெயரை குறிப்பிடும் மகளிர் அமைப்புகள் அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.