மனைவியை குத்திக் கொலை செய்து தானும் தற்கொலை செய்த கணவர்!!

634

bloodதுபாயில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த சோனியா- ரஞ்சித் தம்பதியினர் துபாயில் பணிபுரிகின்றனர். இவர்களது குழந்தைகள் கேரளாவில் படிக்கின்றனர். சோனியாவுக்கும், ரஞ்சித்துக்கும் சமீபகாலமாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அல் கர்ஹவுத் என்ற இடத்தில் சோனியாவை ரஞ்சித் துரத்தி கொண்டு ஓடினார். அவரை விடாமல் துரத்தி கொண்டிருந்த ரஞ்சித், சோனியாவை கத்தியால் குத்தி கொலை செய்தார் பின்னர் தன்னுடைய மணிக்கட்டை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் மயக்கமடைந்து கிடந்த ரஞ்சித்தை அப்பகுதியில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் அவரிடம் விசாரணை நடைபெறவில்லை.