ஈழத்தின் கலைத்துறையில் சிறப்போடு தன் தனித்துவ ஆற்றலை வெளிப்படுத்தி வரும் சுதர்சன் றட்ணம் அவர்களின் இயக்கத்திலும் நிர்மலனின் இசையிலும் பல இளம் புதிய படைப்பாளிகளின் சிறப்புமிகு நடிப்பிலும் உருவாகிய சாலைப் பூக்கள் திரைப்படம் இன்றைய ஈழ சினிமா வரலாற்றில் முக்கிய பங்காக விளங்குவதோடு ஈழத்திலும் மற்றும் புலம்பெயர் தேசத்திலும் வெற்றிவாகை சூடி இன்று ஓடிக்கொண்டிருக்கிறது.
யாழ்ப்பாண செல்வா திரையரங்கில் வெளியிடப்பட்டு ராஜா திரையரங்கு, திருகோணமலை சரஸ்வதி, திரையரங்கு என்று பல இடங்களிலும் திரைப்படம் காண்பிக்கப்படுகிறது
சாலைப் பூக்கள் திரைப்பட நிகழ்வின் போது இந்திய நடிகர்கள் மற்றும் படைப்பாளிகளின் பேராதரவோடு உலகமெங்கும் வியாபித்தெழும் சாலைப் பூக்கள் திரைப்பட நிகழ்வில் இந்திய திரையுலக நகைச்சுவை நடிகர் வையாபுரி மற்றும் பிக் போஸ் நிகழ்ச்சி புகழ் கவிஞர் சிநேகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு
மக்களாலும் படைப்பாளிகளாலும் ஆதரவோடு கூடிய வரவேற்பை பெற்ற முதல் படமாக சாலைப் பூக்கள் திரைப்படம் இன்றைய ஈழ சினிமா வரலாற்றில் மகுடம் சூடி விளங்குகின்றது.
சாலைப் பூக்கள் திரைப்படம் தாய் தந்தை உறவுகள் இழந்த சிறுவர்களின் இன்றைய நிலையை எடுத்துக் காட்டுவதோடு அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பார்வையாகவும் தனிமனித சிந்தனை மீண்டும் மீண்டும் உறக்கம் கலைத்து எழுந்து புரட்சி செய்யும் விதமாகவும் சிறப்போடு பல விறுவிறுப்பான காட்சிகளோடு உணர்வுகளை வருடும் பாடலோடும் கலைத்துறையில் மேன்மையடைந்திருக்கிறது சாலைப் பூக்கள் திரைப்படம்.
இன்று வவுனியா வசந்தி திரையரங்கில் முதல் காட்சியாக சாலைப் பூக்கள் திரைப்படம் காண்பிக்கப்பட இருக்கிறது.
சுதர்சன் றட்ணம் அவர்களின் அசாத்திய இயக்கம் பலரையும் வியப்பில் உறைய வைத்திருப்பது ஈழத்து சினிமாவின் பெரும் வெற்றியாக பலரினால் பேசப்படுவதும் குறிப்பிடத்தக்கது. சாலைப் பூக்கள் திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துகள்.