அடுத்த விஜயசாந்தி நான் தான் : கம்பீரமான குரலில் நமீதா!!

622

Nameethaஅடுத்த விஜயசாந்தி நான் தான் என கம்பீரமாக கூறி வருகிறார் கவர்ச்சி புயல் நமீதா. பொலிஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றாலே உடற்கட்டு மிகவும் முக்கியம்.

இதுவரை நடித்த நடிகைகளிலேயே விஜயசாந்தி இதற்கு மேட்சாக இருந்தார். சண்டை காட்சிகளில் அவர் செய்த சாகங்களை செய்ய வேறு யாருக்கும் துணிவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் அய்யர் ஐபிஎஸ் படத்தை இயக்கிய அரிராஜன் இயக்கி வரும் படம் இளமை ஊஞ்சல். இந்த படத்தில் பொலிஸ் வேடத்தில் நடிக்கிறார் நமீதா.

இதில் தீவிரவாதிகளால் கடத்தப்படும் 5 நடிகைகளை காப்பாற்றும் அதிரடி பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் நமீதா இதற்காகவே மாதக்கணக்கில் டயட், உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது உடம்பை ஸ்லிம் பண்ணி நடித்திருக்கிறார்.

அத்துடன் விஜயசாந்தியின் பாணியை பின்பற்றும் நமீதா இந்த படத்திற்கு பிறகு வாய்ப்புகள் வந்து குவியும் என நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.