ஏசி வெடித்ததால் ஆசிரியை பரிதாபமாக பலி!!

712

கிருஷ்ணகிரி அருகே ஏசி வெடித்ததால் பள்ளி தலைமை ஆசிரியர் இறந்து போன சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி சாந்தி நகரில் வசித்து வருபவர் ஆல்பர்ட், அஞ்சலா மேரி தம்பதியினர். இதில் ஆல்பர்ட் மின்சார வாரியத்திலும் அஞ்சலா மேரி அரசு பள்ளியில் தலைமையாசிரியராகவும் வேலை பார்த்து வந்தனர்.

நேற்றிரவு வீட்டில் தூங்கும்போது ஏ சி போட்டுள்ளனர். அதிகாலை நடைபயிற்சிக்காக ஆல்பர்ட் வெளியே சென்ற நிலையில் அஞ்சலா மேரி உறங்கி கொண்டிருந்தார்.

திடீரென ஏ சி இயந்திரம் வெடித்து அதில் இருந்து கரும்புகை வந்துள்ளது. அதனால் மூச்சுத் திணறிய நிலையில் அஞ்சலா மேரி பரிதாபமாக இறந்தார். நடைப் பயிற்சி முடிந்து வீட்டுக்கு வந்த ஆல்பர்ட், மனைவி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக பொலீசுக்குத் தகவல் தெரிவித்தார். அஞ்சலா மேரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.