வவுனியா நகரை இலங்கையின் முன்னுதாரணமாக மாற்றுவதே என் நோக்கம் வவுனியா நகரபிதா!!

368

வவுனியா நகரத்தை இலங்கையில் முன்னுதாரணமான நகரமாக மாற்றுவதே எனது நோக்கமென வவுனியா நகரபிதா இ.கௌதமன் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா நகரசபையினால் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது. கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் நகர அபிவிருத்தி என்பன முக்கியவிடயமாகும்.

கடந்த காலங்களில் பௌர்ணமி விழாக்கள் கொண்டாடப்பட்டு பின்னர் அவை கைவிடப்பட்டிருந்தது. எமது காலத்தில் அதனை மீள்நடத்தி வவுனியா கலைஞர்களுக்கு ஊக்கத்தினை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

நகர அபிவிருத்திக்கான முடிவுகள் தவிசாளர் என்ற வகையில் தன்னிச்சையாக என்னால் மாத்திரம் எடுக்கப்படாது. அனைத்து உறுப்பினர்களது ஒத்துழைப்பு ஆலோசனைகள் பெறப்பட்டு மேற்கொள்ளப்படும்.

அதற்கும் அப்பால் புலம்பெயர் மக்களதும் துறைசார் நிபுணர்களதும் கருத்துக்களும் ஒத்துழைப்புகளும் எமக்கு தேவைப்படும் சந்தர்ப்பத்தில் பெறப்பட்டு நகரம் அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்ல திடசங்கற்பம் எடுத்துள்ளோம்.

அதற்கு அனைவரும் கட்சி, மதம், இனம் என்ற வேறுபாடு இன்றி எமது நகரம் என்ற நோக்கோடு கைகோர்க்க வேண்டும். அதனூடாகவே மக்கள் சேவையில் மகிழ்ச்சி காண முடியும் என தெரிவித்தார்.