வவுனியாவில் பொலித்தீன் பாவணை தொடர்பாக வியாபார நிலையங்களில் திடீர் சோதனை!!

549

வவுனியா வர்த்தக நிலையங்களில் இன்று(24.04) காலை உணவகங்கள் மற்றும் வியாபார வர்த்தக நிலையங்களில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் விற்பனை செய்யப்படும் பொலிதீங்கள் தொடர்பாகவும் அதன் தன்மைகள் தொடர்பாகவும் பரிசோதனை மேற்கொண்டனர்.

இலங்கையில் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கு மாற்றீடாக இலகுவில் உக்கக்கூடியதும் சுகாதாரத்திற்கு தீங்கற்ற பொலீத்தீன் பாவனையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பொலித்தீனின் தன்மைகள் தொடர்பாக திடீர் பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா கந்தசாமி ஆலய வீதிகளிலுள்ள உணவகங்கள் மற்றும் வியாபார விற்பனை நிலையங்களில் இச் சோதனை நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அலுவலகர்கள், பொலிசார் இந்நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். உணவகங்கள், வியாபார நிலையங்களுக்கு விற்பனை செய்யப்படும் பொலித்தீன் அதன் அளவு தன்மை உணவகங்களில் மேற்கொள்ளவேண்டிய பொலித்தீன் சுகாதாரத்திற்கு தீங்கற்றவிதத்தில் அமையப்பெறுதல் போன்ற அறிவுறுத்தல்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினரால் வழங்கப்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.