வடமத்திய மாகாண அரச அலுவலகங்களில் புகைத்தலுக்கு எதிரான குழு!!

534

No Smokeவட மத்திய மாகாணத்தின் அனைத்து அரச அலுவலகங்களிலும் புகைத்தலுக்கு எதிரான செயற்குழுவொன்றை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாத ஆரம்பத்தில் இந்த வேலைத் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புகைத்தலால் நாளாந்தம் 54 பேர் உயிரிழப்பதோடு வருடாந்தம் 21,000 பேர் பலியாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புகைபிடித்தலை குறைக்கும் நோக்கத்துடன் அடுத்த வருடத்தில் விஷேட வேலைத்திட்டங்கள் பலவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.