புறக்கோட்டையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 9 பெண்கள் கைது!!

1277

SLகொழும்பு , புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குணசிங்கபுர, ஒல்கொட் மாவத்தை பிரதேசத்தில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு , புறக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குணசிங்கபுர, ஒல்கொட் மாவத்தை பிரதேசத்தில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின்போது அங்கிருந்த பெண்கள் 9 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் 23 வயதிற்கும் 48 வயதிற்கும் உட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் கொட்டுகொட, மாதம்பே, கடுவெல, சீதுவ, அங்குலான மற்றும் தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் புறக்கோட்டை பொலிஸாரினால் மாலிகந்த நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.