மலேசிய விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இலங்கையருக்கு 20 வருட சிறைத்தண்டனை?

540

விமானம் ஒன்றுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த இலங்கை இளைஞர் இன்றைய தினம் அவுஸ்திரேலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து இருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்திற்கு இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அவரது குற்றச்சாட்டிற்கான தண்டனை இன்றையதினம் அறிவிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டு ஜுன் மாதம் மலேசிய விமான சேவைக்கு சொந்தமான MH128 என்ற விமானம் பயணித்து சற்று நேரத்தில் மனோத் மார்க்ஸ் என்ற 26 வயதான இலங்கை இளைஞரால் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் Dandenong பகுதியில் வாழும் இளைஞனின் இந்த செயற்பட்டினால் மீண்டும் விமான மெல்போர்ன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.  இந்த இளைஞனை கைது செய்யும் வரை கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் பயணிகளை விமானத்திற்குள்ளேயே வைத்திருப்பதற்கு பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கையில் வெடி குண்டு உள்ளதாக இளைஞனை சோதனையிட்ட போது அவரிடம் ஸ்பீக்கர் போன்ற உபகரணம் ஒன்றே காணப்பட்டுள்ளது.

விமானத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்த மார்க்ஸ் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு குறைந்த பட்சம் 20 வருட சிறைத்தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.