வவுனியாவில் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை : மாணவன் வைத்தியசாலையில்!!

1277

 

வவுனியா குடியிருப்பு பகுதியில் தன்னுடைய இல்லத்தில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடாத்தி வரும் பிரபல பாடசாலையில் கற்பித்து வரும் ஆசிரியை ஒருவரிடம் கல்வி பயிலும் ஒன்பது வயதுடைய தரம் நான்கில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக கல்வி நிலையத்திற்கு சமூகம் தராதமையையடுத்து நேற்றைய தினம் (25.04.2018) மாணவனை குறித்த ஆசிரியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

ஆசிரியை தாக்கியதில் மாணவனின் மூக்காலும், காதாலும் இரத்தக் கசிவு ஏற்பட்டதுடன் மாணவனின் கன்னம் கண்டல் காயத்துக்குள்ளாகி மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் பெற்றோரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியை கடந்த காலங்களிலும் மாணவர்களை கடுமையாக தாக்குகின்றார் என்ற குற்றச்சாட்டும் பெற்றோர் மத்தியில் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.