35 வயதிற்கு மேலான ஆண்கள் : கட்டாயம் படிக்கவும்!!

477

பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படுவார்கள். அதற்கு ஆண்கள் இளமைக் காலத்தில் கண்ட உணவுகளை உட்கொள்வது, அதிகப்படியான வேலைப்பளு போன்றவற்றை காரணமாக கூறலாம்.

அதனால் ஆண்கள் அதிக மன அழுத்தத்திற்கு உட்பட்டு, விரைவில் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் கஷ்டப்பட நேரிடுகிறது.

எனவே ஆண்களுக்கு வயது அதிகரிக்க ஆரம்பிக்கும் போது ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கத்தையும் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

35 வயதிற்கு மேலான ஆண்கள் பின்பற்ற வேண்டியவை?

ஆண்கள் எப்போதும் தங்களது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிக்க கொழுப்பு மிக்க இறைச்சிகளை தவிர்த்து, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும்.

35 வயதிற்கு மேல் உள்ள ஆண்களுக்கு தான் உடலில் கொழுப்புக்கள் அதிகமாக தேங்க ஆரம்பிக்கும். எனவே அந்த வயதில் உடற்பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும்.

புகைப் பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். இல்லையெனில் அதில் உள்ள நிக்கோட்டின் நுரையீரலுக்கு மட்டுமின்றி, இதயத்திற்கும் பெரும் தீங்கை உண்டாக்கி, மாரடைப்பு மற்றும் புற்றுநோயை ஏற்படுத்திவிடும்.

மதுப் பழக்கத்தையும் 35 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இதய நோயின் அபாயம் அதிகரித்து, பாலியல் பிரச்சனைகளான விறைப்புத்தன்மை பிரச்சனை போன்றவற்றை சந்திக்கக் கூடும்.

ஆண்கள் 35 வயதிற்கு மேல் உண்ணும் உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும். உப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால், ரத்த அழுத்த பிரச்சனையை சந்தித்து, இதய நோயால் பாதிக்கப்பட வேண்டியிருக்கும்.

எலும்புகளை வலிமையாக்க கல்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் தவறாமல் உட்கொள்ள வேண்டும். அதோடு புரோபயோடிக்ஸ் நிறைந்த தயிர் மற்றும் நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.

ஆண்கள் வயதான காலத்தில் சோடா பானங்களை அடிக்கடி குடித்தால், அது புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்து, உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயை உண்டாக்கும்.

ஆண்கள் 35 வயதிற்கு மேல் புரோட்டீன் நிறைந்த உணவுகளையும், நல்ல கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

பாலியல் வாழ்க்கையை சிறப்பாக்க மாதுளை, முருங்கைக்காய், தர்பூசணி, நட்ஸ் போன்றவற்றை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.