பொலிஸாரை கண்டதும் 5000 ரூபா நாணயத்தாள்களை வாயில் போட்ட இளைஞர்கள்!!

676

 

ஓட்டமாவடியில் போலி நாணயத்தாள்களுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

இதில் பொலன்னறுவை சுங்காவில் பகுதியைச் சேர்ந்த 18 – 26 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்கள், பதினொரு போலியான 5,000 ரூபாய் நாணயத்தாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓட்டமாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டர் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பி விட்டு நாணயத்தாளை வழங்கும் போது ஊழியர் இது போலி நாணயத்தாள் என அறிந்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பொலிஸாரைக் கண்டதும் குறித்த இளைஞர்கள் போலி நாணயத்தாள்களை வாயில் போன்று மென்றுள்ளனர். எனினும் குறித்த பணத்தை பொலிஸார் கைப்பற்றியதுடன், இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.