வெளிநாட்டில் இருந்து வந்த இலங்கையர் ஒருவர் விமான நிலையத்தில் கைது!!

808

சட்டவிரோதமான முறையில் டுபாய் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சிகரட் ஒரு தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க பிரிவு அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 33,000 சிகரட்டுக்களை சுங்க பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதன் சந்தை பெறுமதி 16 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 36 வயதுடைய ஊருமீய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.