நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியையும் வென்று தொடரை 3-0 என கைப்பற்றியது பங்களாதேஷ் அணி!!

286

banபங்களாதேஷ் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது ஒரு நாள் போட்டி நேற்று பதுல்லாவில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தேவ்சிச்- லதாம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

தேவ்சிச் 46 ஓட்டங்களிலும், லதாம் 43 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் டெய்லரும், முன்ரோவும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசித் தள்ளினர். டெய்லர் 107 ஓட்டங்களும், முன்ரோ 85 ஓட்டங்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இவர்கள் ஆட்டத்தால் நியூசிலாந்து 307 ஓட்டங்கள் குவித்தது.

308 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பங்களாதேஷ் களம் இறங்கியது. தொடக்க வீரர் சம்சுர் ரஹ்மான் 96 ஓட்டங்கள், நமீம் இஸ்லாம் 63 ஓட்டங்களும் எடுத்தனர். இறுதியில் நசீர் ஹுசைன் அதிரடியாக விளையாடி 44 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தார். பங்களாதேஷ் 49.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு309 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை பங்களாதேஷ் அணி 3-0 என வெற்றிபெற்றது.