வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகம்!!

274

1அண்ணா நகர் மல்டி ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய அணிக்கு 6 பேர் கொண்ட 5 பந்து பரிமாற்றங்கள் கொண்டமென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற லயன்ஸ் அணி தலைவர் சிவச்செல்வன் உதயநிலா அணியை துடுப்பெடுத்தாட பணித்ததன் பேரில் களமிறங்கிய உதயநிலா அணி 5 பந்துப் பறிமாற்ற நிறைவில் 25 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
ஸ்ரீ, கஜன் தலா ஒரு விக்கெட், சந்திரா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லயன்ஸ் அணியினர் 3.4 ஓவர் நிறைவில் ஒரு விக்கற்றை மட்டும் இழந்து வெற்றி பெற்றனர். ஸ்ரீ 3 ஓட்டங்களையும், சந்திரா 10 ஓட்டங்களையும் ,பிரசன்னா 12 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

வெற்றி பெற்ற லயன்ஸ் அணியினருக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. ஆட்ட நாயகனாக சந்திரபிரகாஷும், தொடர் நாயகனாக ஸ்ரீகரனும் தெரிவுசெய்யப்பட்டனர்.