சென்னை உணவகத்தில் நடந்த கொலை : சிசிடிவியில் பதிவான அதிர்ச்சிக் காட்சிகள்!!

535

சென்னையில் ரோபோட் உணவகத்தில் பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ரோபோட் உணவகத்திலேயே நேற்று முன்தினம் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. ரோபோட் உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவுகள், ரோபோ மூலம் சப்ளை செய்யப்படும்.

இந்த உணவகத்தில் வட இந்தியாவை சேர்ந்த அனில் குரு மற்றும் யுனஸ் என்பவர்கள் வேலை செய்து வந்தனர். நேற்றிரவு சர்வீஸ் செய்யும் போது உணவு மாறியதால், வாடிக்கையாளர் சண்டையிட்டு சென்றுள்ளார்.

இதனால் யுனஸ் மற்றும் அனில் குரு வாக்குவாதம் செய்ய சண்டை முற்றியுள்ளது. இதில் கோபமடைந்த அனில் குரு, அருகிலிருந்த சமையலறை கத்தியை கொண்டு யுனஸை குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த யுனஸ் துடிதுடிக்க இறந்துள்ளார், உடனடியாக செம்மஞ்சரி பொலிசுக்கு தகவல் அளிக்க விரைந்து வந்த அதிகாரிகள் யுனஸின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு அனில் குருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.