மகளைக் கொலைசெய்து தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் : அதிர்ச்சிக் காரணம்!!

1125

மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட பெண்ணைப் பற்றி முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.  புதுவை வைத்திக்குப்பம் கெங்கையம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சுஜித்ரா(27). கேரளாவைச் சேர்ந்தவரான இவர் சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

இவர்களுக்கு நிவேதா(10) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சுரேஷிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் பிரிந்து சென்று, குயிலாபாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் பிரபாகரனுடன் பழக்கம் ஏற்பட்டதால், அவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய 2-வது கணவரான பிரபாகரனும் கார் விபத்தில் பலியானதால் இவர் மிகவும் கவலையில் இருந்துள்ளார்.

இதன் காரணமாக பிரல ஹோட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த வேலையில் இருந்தும் நின்றுள்ளார். காதல் கணவர் பிரிந்து விட்ட நிலையில், இரண்டாவது கணவரும் இறந்ததால் மிகவும் விரக்தியில் இருந்த சுஜித்ரா தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் மகளை யாரும் பார்க்கமாட்டார்கள் என்று கருதி மகளையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதனால் உடல்நிலை சரியில்லை எனக்கூறி குளுக்கோஸ் வாங்கி அதில் அதிக தூக்க மாத்திரைகளை கொடுத்து மகளை கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதோடு, தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்டநேரமாக அவரது வீட்டுக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து திறந்து பார்த்த போது மகள் மற்றும் தாய் இறந்துகிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.