இந்தியாவில் இளம் பெண் ஒருவர் இந்த சாமியை நீ கும்பிடக் கூடாது என்று கூறி கோவிலிருந்து விரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கீழ் கூனிச்சம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் ராதா. கோவிலில் அம்மனை தரிசிக்க சென்ற பெண்ணுக்கு நடந்த கொடுமை!!இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அங்கிருக்கும் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் ராதா பட்டியலின் மக்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறி கோவிலுக்குள் வரக் கூடாது என்று மிரட்டியுள்ளனர்.
ஆனால் அவரோ, அங்கிருந்து செல்ல மறுத்ததுடன் அந்த சாமி வந்து சொல்லட்டும் என்ற கூறினார். உடனே ஊர் பெரியவர்கள் உங்கள் கோவிலுக்கு நாங்கள் வருகிறோமா, உங்கள் கோவிலுக்குப் சென்று சாமி கும்பிடு போ என்று கூறியுள்ளனர்.
அதற்கு அந்த பெண் கோவிலில் உங்கள் கோவில், எங்கள் கோவில் என்று பாகப் பிரிவினை கிடையாது. சாமியை எங்கு வேண்டுமானாலும் கும்பிடலாம் என்று அவர்களிடம் வாதாடிய போது, அவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் குறித்த பெண்ணை மிரட்டியும், அடிக்கவும் முயற்சி செய்கின்றனர். இது குறித்து வீடியோ தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து அங்கிருப்பவர்கள் கூறுகையில், சம்பவ தினத்தன்று கோவிலில் திரௌபதி அம்மனுக்கு விசேஷ பூஜை நடைபெற்று கொண்டிருந்தது. அந்த வழியே சென்று கொண்டிருந்த ராதா பூஜை நடந்துகொண்டிருக்கிறதே அம்மனை தரிசிக்கலாம் என்று கோவிலுக்குள் சென்ற போது தான் இது நடந்துள்ளது என்று கூறியுள்ளனர்.






