முண்டமாக தொங்கிய சடலம் : வெளிநாட்டு பெண் கொலையில் திடுக்கிடும் தகவல்கள்!!

672

 

கேரளாவின் திருவனந்தபுரத்தில் முண்டமாக தொங்கவிடப்பட்டிருந்த வெளிநாட்டு பெண்ணின் கொலை தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்வியா நாட்டை சேர்ந்தவர் லிகா, இவர் தனது கணவர் மற்றும் சகோதரியுடன் கடந்த பிப்ரவரி மாதம் சிகிச்சைக்காக கேரளா வந்துள்ளார். இங்கு கடந்த மார்ச் மாதம் 14ம் திகதி காணாமல் போயுள்ளார், லிகா குறித்து குடும்பத்தினர் அளித்த தகவலின்படி பொலிசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் கழித்து கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் இளம்பெண்ணின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இது லிகா தான் என அவரது சகோதரி உறுதி செய்த நிலையில், டிஎன்ஏ பரிசோதனை செய்ய பொலிசார் முடிவெடுத்திருந்தனர்.

இந்நிலையில் லிகா கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேலும் கை, கழுத்து உட்பட உடலின் பல பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும், மூச்சுத்திணறி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சிறப்பு விசாரணைக் குழுவினர் கூறுகையில், லிகாவின் மரணம் தொடர்பில் ஒன்பது பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.

இதில் யோகா பயிற்சியாளரும் சம்மந்தப்பட்டுள்ளார், இவருடன் உள்ளூர் போதை மருந்து கும்பலுக்கும் தொடர்பிருப்பதாக தெரிகிறது.

ஏனெனில் போதை மருந்து கும்பலில் இருவர் உட்பட யோகா பயிற்சியாளரையும் அப்பகுதியில் பார்த்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் மூவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் மூவரும் லிகா படகில் தோப்பு பகுதிக்கு அழைத்து சென்றிருக்கலாம் என்றும், பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற போது அவர் இறந்திருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

ஏனெனில் அப்பகுதிக்கு அருகே நின்றிருந்த படகில் லிகாவின் தலைமுடி இருந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அக்கும்பலிடம் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.